பிளானை மாற்றிய சிவகார்த்திகேயன் !படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

 பிளானை மாற்றிய சிவகார்த்திகேயன் !படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடிக்கும் படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் சூரி, பால சரவணன், முனீஸ்காந்த், புகழ், சிவாங்கி  மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர் நடிக்கின்றனர்.

கொரோனா காரணமாக கோயம்புத்தூரில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது பாதிப்புகள் குறைந்திருந்தாலும், சென்னையை விட கோயம்புத்தூரில் அதிகமாக இருப்பதால் சென்னையிலேயே அடுத்த கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு எடுத்து விரைவில் சென்னையில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

  • 6 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !