சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘#DON’ படத்தின் தெலுங்கு வெர்ஷன் ட்ரைலர் .!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் .
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் வரும் வரும் மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டான் படம் தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் (மே 13) தெலுங்கு வெர்ஷனிலிலும் ரிலீஸாகிறது. மேலும் தெலுங்கில் படத்துக்கு ‘காலேஜ் டான்’ என்ற பெயரை வைக்கப்பட்டுள்ளது. காலேஜ் டான் படத்தின் போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன.
முன்னதாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது. டான் படத்தின் தெலுங்கு வெர்ஷன் டிரைலரும் தற்போது வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.