சிவகார்த்திகேயன் ‘#டாக்டர்’ ட்விட்டர் விமர்சனம் இதோ ! படம் எப்படி இருக்கு ?

 சிவகார்த்திகேயன் ‘#டாக்டர்’ ட்விட்டர் விமர்சனம்  இதோ ! படம் எப்படி இருக்கு ?

சிவகார்த்திகேயன், பிரியங்கா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு, வினய், மிலிந்த் சோமன்; ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்; இசை: அனிருத்; இயக்கம்: நெல்சன் திலீப் குமார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு காத்திருந்து தனது ‘டாக்டர்’ படம் மூலம் வெற்றி கனியை பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.  விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு திரையரங்கில் வெளியாகிய முதல் நாளிலேயே பெரிய அளவில் வெற்றி-யை குவித்திருக்கும் ‘டாக்டர்’ ஒரு டார்க் காமெடி வகை திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்குப் பிறகு டாக்டர் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். வழக்கமான கடத்தல் கதை போல் இல்லாமல், வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக நகரும் திரைக்கதை முதல்பாதியிலேயே அதிக விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது.

ஆனால், பிற்பாதியில் அந்த விறுவிறுப்பு சற்று குறைந்து காணப்படுகிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு.

  • 265 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !