#OTT யில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்..’?- படக்குழு அதிரடி முடிவு

 #OTT யில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்..’?- படக்குழு  அதிரடி முடிவு

‘ஹீரோ’ படத்துக்குப் பிறகு ‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 26-ம் தேதி ‘டாக்டர்’ வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் காரணமாக படத்தின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் படக்குழுவினர் ஒத்திவைத்தனர்.

தற்போது கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறன்றன. திரையரங்குகள், ஷாப்பிங் மால் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல திரைப்படங்கள் வெளியாகாமல் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

‘டாக்டர்’ படத்தின் வெளியீட்டை தேதி குறிப்பிடாமல் படக்குழுவினர் ஒத்திவைத்ததால் ரசிகர்கள் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்து அது தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் குழுவுடன் டாக்டர்களும் ஒப்பந்தம் செய்து விட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 8 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !