முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி!ஏன் தெரியுமா?

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சிரஞ்சீவி!ஏன் தெரியுமா?

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்வதாக வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.

நேற்று நடிகர் பவன் கல்யாண், தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். மேலும், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாகவும் ஸ்டாலினை, பவன் கல்யாண் பாராட்டி இருந்தார்.

இந்நிலையில், முன்னணி நடிகர் சிரஞ்சீவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • 9 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !