”எஞ்சாயி எஞ்சாமி” சர்ச்சை ; புறக்கணிக்கப்படுகிறாரா அறிவு..? பாடகி தீ விளக்கம்!

 ”எஞ்சாயி எஞ்சாமி” சர்ச்சை ; புறக்கணிக்கப்படுகிறாரா அறிவு..? பாடகி தீ விளக்கம்!

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற அந்த விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதில் ஒரு பகுதியாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். அப்போது இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப பின்பு அது சர்ச்சையானது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் வகையில் தெருக்குரல் அறிவு “இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. முடிவில் உண்மைதான் எப்போதும் வெல்லும்” எனக் கூறியிருந்தார். இதன் பிறகு இதற்கு விளக்கமளிக்கும் விதமாக சந்தோஷ் நாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பாடகி தீயும் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “என்ஜாய் எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே . அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்துவதை செய்துவருகிறேன்.

அதேநேரம், எங்களது பணி குறித்து மற்றவர்களால் பகிரப்படும் விளம்பரங்களில் எனக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இயக்குநர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி’ திரைப்படமும் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. என்ஜாய் எஞ்சாமி பாடல் பெற்ற பெருமையை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து கொண்டாடவே விரும்பினேன்.

  • 12 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !