சிம்புவின் அம்மா வெளியிட்ட அதிரடி வீடியோ!

 சிம்புவின் அம்மா வெளியிட்ட அதிரடி வீடியோ!

நடிகர் சிம்பு விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மளேனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்புவின் கடந்தகால செயல்பாடு காரணமாக நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த விவகாரங்களுக்கு தீர்வு எட்டப்படும்வரை சிம்புவின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றக்கூடாது என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மளேனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்பதாக முதலில் பெப்சி அமைப்பு கூறிய நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்றுவரும் கௌதம் மேனன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இது இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியுள்ளது.

அதன் உச்சகட்டமாக பெப்சி அமைப்போடு முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம் இனி தங்களைக் கட்டுப்படுத்தாது என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூடி முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டது ஏன் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

  • 142 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !