நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…! தட்டி தூக்கிய மாநாடு…! ட்விட்டர் விமர்ச்சனம் இதோ !

 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ…!  தட்டி தூக்கிய மாநாடு…! ட்விட்டர் விமர்ச்சனம் இதோ !

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. பல்வேறு பிரச்சினைகளால் இந்த படம் வெளியாவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும் நேற்று சில பிரச்சினைகளால் இந்த படம் மேலும் தள்ளி வைக்கப்படும் நிலையும் ஏற்பட்டது.

இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளும் முடிந்து ஒருவழியாக படம் இன்று வெளியாகியுள்ளது. நீண்ட ஆண்டுகள் கழித்து சிம்பு படம் திரையரங்கில் வெளியாவதால் காலை முதலே ரசிகர்கள் பலர் படம் பார்க்க திரையரங்குகளில் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் திரையரங்கில் சிம்பு பெயர் வரும்போது ரசிகர்கள் கூச்சலிட்டு கொண்டாடும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன.

காலை 6.45 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்களின் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் ‘மாநாடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

  • 121 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !