சிம்புவின் ‘பத்து தல’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா ? வெளியான சூப்பர் அப்டேட்!!

நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் முதல் நாள் ரூ.12.3 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நேற்று (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியான படம் ‘பத்து தல’. கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்க்ஸ்லி, சென்றாயன், அனு சிதாரா, டீஜே உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பட்ஜெட் ரூ.40 கோடி. இந்நிலையில், கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் முதல் நாள் ரூ.12.3 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் முதல் நாள் ரூ.7 கோடியை வசூலித்திருந்தது. சிம்புவின் கரியரில் அதிகபட்ச ஓப்பனிங் கொண்ட படம் என்ற பெருமையை ‘பத்து தல’ படம் பெற்றுள்ளது.