தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
பெண்ணாக மாறிய ரஜினி பட வில்லன்!! வைரலாகும் BST வீடியோ!!

நடிகர் நவாசுதீன் சித்திக் தனது அடுத்தப்படமான ஹடிக்காக தான் ட்ரான்ஸ்ஃபார்ம் ஆகியிருக்கும் வீடியோவை வெளியிட்டார். ரிவென்ச் திரில்லராக உருவாகும் இப்படத்தில், திருநங்கை உட்பட இரட்டை வேடங்களில் நடிக்கிறார் நவாசுதீன்.
அதோடு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 38 வினாடிகள் கொண்ட வீடியோவையும் வெளியிட்டார். இது அவரது ட்ரான்ஸ்பார்மை காட்டுகிறது. குர்தா அணிந்திருக்கும் நடிகருக்கு கண்களில் மை, லிப்ஸ்டிக் மற்றும் இறுதியாக நீண்ட முடியுடனான விக் பொருத்தப்பட்டு தோற்றம் மாற்றப்படுகிறது.
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ஆனந்திதா ஸ்டுடியோவின் ராதிகா நந்தா மற்றும் சஞ்சய் சாஹா ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தின் படம், மேற்கு உத்தரபிரதேசத்தைச் சுற்றியுள்ள நொய்டா மற்றும் காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. முன்னதாக, பாம்பே டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், தனது மகள் முதல் முறையாக தன்னை பெண் உடையில் பார்த்து வருத்தப்பட்டதாகவும், இறுதியில் அது ஒரு படத்திற்காக என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார் நவாசுதீன்.
ஹாடி படப்பிடிப்பின் அனுபவத்திற்குப் பிறகு, நடிகைகள் மீதான மரியாதை பல மடங்கு அதிகரித்ததாகவும் நவாசுதீன் கூறினார். “ஒரு நடிகை தனது வேனில் இருந்து வெளியே வருவதற்கு ஏன் ஆண் நடிகரை விட அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் என்று இப்போது எனக்கு புரிகிறது. இது முற்றிலும் நியாயமானது” என்ற அவர், வெறும் நடிப்பு மட்டுமின்றி, முடி, ஒப்பனை, உடைகள், நகங்கள் உள்ளிட்ட பலவற்றை பெண்கள் கவனிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டார் நவாசுதீன்.
https://twitter.com/ZeeStudios_/status/1602536546107723776?t=6d6Z5dWhEe5aAlFp6EyPFQ&s=19