ரசிகர்களுக்கு குழந்தையை அறிமுகம் செய்த நடிகை #ஸ்ரேயா!வைரலாகும் வீடியோ!

 ரசிகர்களுக்கு குழந்தையை அறிமுகம் செய்த நடிகை #ஸ்ரேயா!வைரலாகும் வீடியோ!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ஸ்ரேயா, தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயாவுக்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாகும் ஜாக்பாட் அடித்தது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து கலக்கினார் ஸ்ரேயா.

கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்ரே கொஸ்சீவை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதி தற்போது பார்சிலோனாவில் வசித்துவருகிறது.

இந்த நிலையில், கடந்த ஊரடங்கின்போது தனக்கு குழந்தை பிறந்ததாகத் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள ஸ்ரேயா, தன்னுடைய குழந்தையை ரசிகர்களுக்கு அறிமுகமும் செய்துவைத்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 2020ஆம் ஆண்டு அழகான ஊரடங்கு கிடைத்தது. உலகம் பெரிய குழப்பத்தை எதிர்கொண்டிருந்தபோது எங்களுடைய உலகம் கற்றல், மகிழ்ச்சி, சாகசம் நிறைந்த உலகமாக மாறிவிட்டது. எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை இருப்பதற்காக ஆசீர்வதிக்கப்பட்டோம். கடவுளுக்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, நடிகை ஸ்ரேயாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.  

 • 31 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !