சால்ட் அண்ட் பெப்பர் தாடி…ஸ்டைலிஸ் கெட்டப்பில் விஜய்!வைரலாகும் போட்டோஸ்..!

 சால்ட் அண்ட் பெப்பர் தாடி…ஸ்டைலிஸ் கெட்டப்பில் விஜய்!வைரலாகும் போட்டோஸ்..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார்.

விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதில் தளபதி விஜய் நடனமைப்பாளர் ஜானி மாஸ்டரை கட்டிபிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இன்று ஜானி மாஸ்டரின் பிறந்தநாள் என்பதால் பீஸ்ட் படக்குழுவினர், அவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அதன் காரணமாக தற்போது இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில் விஜய் அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் தாடியில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • 206 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !