ஷங்கர், ராம்சரண் படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

 ஷங்கர், ராம்சரண் படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், தற்போது பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்கிவருகிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். தற்காலிகமாக ‘ராம்சரண் 15’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘ராம்சரண் 15’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி படக்குழு தற்போது பிரமாண்ட பொருட்செலவில் 1000 நடனக்கலைஞர் இடம்பெறும் பாடலையும் படத்தின் சண்டை காட்சிகளையும் படப்பிடிப்பு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஆகஸ்ட் மாதம் வெளிநாடு செல்லவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  

  • 5 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !