நடிகர் சதீஷ் நடிக்கும் படத்தில் நாயகியான ‘குக் வித் கோமாளி’ பவித்ரா!

 நடிகர் சதீஷ் நடிக்கும் படத்தில் நாயகியான ‘குக் வித் கோமாளி’ பவித்ரா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் தற்போது, இறுதி சுற்றில் பங்கேற்றுள்ள பிரபலங்களில் ஒருவரான, பிரபல மாடலும், நடிகையுமான பவித்ரா லட்சுமி. ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில், வயல் கார்டு சுற்று மூலம் மீண்டும் பைனலிஸ்ட்டாக தேர்வு செய்ய பட்டுள்ளார்.தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

விஜய் நடித்த பிகில் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் தான் பவித்ரா கதாநாயகி ஆகிறார். இந்த படத்தில் நாயகனாக காமெடி நடிகர் சதீஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அஜிஷ் அசோக் என்பவர் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஒரு நாய் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும் அந்த நாயின் அனிமேஷன் கேரக்டர் குறித்த பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் வந்து சதீஷ் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 179 Views

    5 Comments

    • she is very Alzahgi….my im your fan mam..

      • YES,,,,she is very beauty…and sathis sir is luckyyyy….durrr

    • Congrats Sathish Sir…your short film was superv..next to big screen hero,,

      • Neengalum hero akideengala….

    • She is gorgeous …

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !