உதவி இயக்குனர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி மகிழ்வித்த வெற்றிமாறன்?!
விளையாட்டு அரசியலில் ! வென்றதா பா.இரஞ்சித் – ஆர்யா கூட்டணி ? #சார்பட்டாபரம்பரை சினிமா விமர்சனம் !

கபாலி, காலா படங்களில் ரஜினிக்காக கதை எழுதிய ரஞ்சித், எந்த கட்டுப்பாடும் இன்றி அட்டக்கத்தி, மெட்ராஸ் வரிசையில் இயக்கியிருக்கும் படம் சார்பட்டா பரம்பரை
விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் படங்கள், இயக்குனர்களுக்கு மிகச் சவாலானவை. படம் பார்ப்பவர்களுக்கு அந்த விளையாட்டு அறிமுகமில்லாவிட்டால், துவக்கத்திலேயே ஆர்வமில்லாமல் போகக்கூடும். அப்படி ஒரு சவாலை ஏற்று களமிறங்கியிருக்கும் பா. ரஞ்சித், முதல் காட்சியிலேயே அந்த சவாலைக் கடந்துவிடுகிறார் என்பதுதான் இந்தப் படத்தின் ஆச்சரியம். 1975ன் பிற்பகுதியில் நடக்கிறது கதை.
அந்த காலகட்டத்தில், வடசென்னையில் சார்பட்டா பரம்பரை – இடியாப்ப பரம்பரை என்ற இரண்டு குத்து சண்டைக் குழுக்களிடையே நிலவும் பகைமைதான் படத்தின் அடிப்படை.
சார்பட்டா பரம்பரையைச் சேர்ந்த ரங்கன் வாத்தியாருக்கு, (பசுபதி) இடியாப்ப பரம்பரை சவால் விடுக்கிறது. அந்த சவாலை ரங்கன் வாத்தியார் எதிர்கொள்வதற்கு உதவும் சிஷ்யனாக வருகிறான் கபிலன் (ஆர்யா). இரு குழுக்களிடையிலான இந்தப் பந்தையத்தில் இறுதியாக ஜெயிப்பதற்கு முன்பாக கபிலன் எதையெல்லாம் ஜெயிக்க வேண்டியிருக்கிறது என்பதே படம்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் வீடியோவில் வரும் 22-ஆம் தேதி வெளியாகிறது. திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம், திரையரங்குகள் திறப்பது தள்ளிப்போவதால் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.