காமெடி கலாட்டாவில் உருவாகியுள்ள ‘குலுகுலு’.. சந்தானம் பட டீசர் வெளியீடு !

 காமெடி கலாட்டாவில் உருவாகியுள்ள ‘குலுகுலு’.. சந்தானம் பட டீசர் வெளியீடு !

 சந்தானத்தின் ‘குலுகுலு’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மேயாத மான், ஆசை ஆகிய படங்களை இயக்கிய ரத்தினகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குலுகுலு’. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடிக்களத்தில் உருவாகியுள்ளது. சந்தானம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை வரும் ஜூலை 29-ஆம் தேதி வெளியிடுகிறது. இதையொட்டி அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிட்டுள்ளது. சந்தானத்தின் முழு காமெடியில் உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்தில் அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஊர் ஊராக பயணிக்கும் தேசாந்திரியாய் சந்தானம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 8773 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !