‘அஜித் 61’ படத்தில் இணைந்ததை உறுதி செய்த தேசிய விருது பெற்ற இயக்குனர்!

 ‘அஜித் 61’ படத்தில் இணைந்ததை உறுதி செய்த தேசிய விருது பெற்ற இயக்குனர்!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61ஆவது படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்காக 20 கிலோவிற்கு மேல் உடல் எடையை குறைத்துள்ளார்.

இப்படத்தின் திரைக்கதை வங்கி கொள்ளையை சுற்றி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘ஏகே 61’ படத்திற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் சென்னை மவுண்ட் ரோடு போன்ற பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாகவும், வில்லனாக ஜான் கொக்கின் நடித்த வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் ‘ஏகே 61’ படத்தில் சமுத்திரக்கனி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இத்தகவலை நடிகர் சமுத்திரக்கனி சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். விசாரணை படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் சமுத்திரக்கனிக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

  • 3819 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !