சமந்தா நடிக்கும் புராணக் காதல் கதை; வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !!!!

 சமந்தா நடிக்கும் புராணக் காதல் கதை;    வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தாவுக்கு பேமிலிமேன் 2 வெப் தொடரில் நடித்த பிறகு வட இந்தியாவிலும் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். இந்தி படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்துள்ளன. தற்போது யசோதா படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படத்தை தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிடுகிறார்கள். அதிரடி திகில் கதையம்சம் கொண்ட படமாக எடுத்துள்ளனர்.

தற்போது நடிகை சமந்தா மகாகவி காளிதாஸ் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையில் நடித்து வருகிறார். இந்த கதையின் நாயகியான சகுந்தலா கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் சமந்தா உடன் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் குணசேகரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

சமந்தா ரூத் பிரபுவின் புராண காதல் கதையான சாகுந்தலம் படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தச் செய்தியைப் பகிர்ந்த தயாரிப்பாளர்கள், “நவம்பர் 4, 2022 முதல் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் #EpicLoveStory #Shaakuntalam சாட்சியாக இருங்கள்!” என்று ட்வீட் செய்துள்ளனர்.

  • 25 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !