#சமந்தா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?

 #சமந்தா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்! இயக்குனர் யார் தெரியுமா?

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படங்களில் நடித்து வருகிறார்.

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்தனர். விவாகரத்துக்கு பிறகு சமந்தா தற்போது டீரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சூர்யாவை (Suriya) வைத்து NGK படத்தையும், கார்த்தியை (Karthi) வைத்து சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் படங்களையும் தயாரித்துள்ளது.

இந்த புதிய படம் அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் Women Centric படமாக உருவாகிறது. சமந்தா ஏற்கனவே யூ டர்ன் படத்தின் தமிழ் ரீமேக்கில் இது போல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 18 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !