சமந்தாவின் ஸ்டண்ட் வீடியோ… Making Of Family Man 2

 சமந்தாவின் ஸ்டண்ட் வீடியோ… Making Of Family Man 2

சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. சீமான், பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் அந்த வெப் தொடர் ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் நாடு முழுவதும் தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தனது சமூக வலைத்தள பக்கத்தில் தினமும் பகிர்ந்து தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் சமந்தா.

இந்நிலையில் தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் தான் டூப் போடாமல் அதிரடியாக சண்டைக் காட்சிகளில் நடித்ததாகவும் தனக்கு ஊக்கமளித்து பயிற்சி கொடுத்த ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென்னுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ பல லைக்குகளை குவித்து வருகிறது.மேலும் இந்த வீடியோவிற்கு, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பல நடிகைகள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

 • 13 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !