‘#கார்கி’யாக மாஸ் காட்டும் சாய் பல்லவி – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

  ‘#கார்கி’யாக மாஸ் காட்டும் சாய் பல்லவி – வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை சாய் பல்லவிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுதவிர அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள ‘கார்கி’ என்கிற படத்தின் அப்டேட்டும் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். ஆனால் பிரேமம் திரைப்படம் அவரை தென்னிந்திய மொழி ரசிகர்கள் மத்தியில் சாய்பல்லவியை பிரபலமாக்கியது.

கார்கி படத்தை கெளதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே நிவின் பாலி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ரிச்சி படத்தை இயக்கியிருந்தார். அவர் இயக்கும் இரண்டாவது படம் தான் கார்கி. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது.

  • 12 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !