‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

 ‘ருத்ர தாண்டவம்’ படத்துக்கு குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, ‘திரௌபதி’ கூட்டணி ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீபின் இசையமைத்துள்ளார். யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ள ‘அம்மாடி’ என்ற பாடல் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

  • 6 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !