‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் !

 ‘#RRR’ படத்தின் மாஸ் அப்டேட்…தெறிக்கவிடும் போஸ்டர் !

ராஜமெளலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் நடிக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் இந்த வருடம் அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

’மஹதீரா, நான் ஈ, பாகுபலி படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி பட ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி இந்தியா மட்டுமல்லாது உலகளவில் வசூல் சாதனை செய்தது. உலக இயக்குநர்களுக்கே தொழில்நுட்பத்தில் சவாலாய் அமைந்தது பாகுபலி. இவரது அடுத்தப்படமான ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரணுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்திய நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இரண்டு பாடல் காட்சிகளைத் தவிர்த்து இதர காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாகப் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. மேலும், ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டு மொழிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாகவும், விரைவில் இதர மொழிகளுக்கான டப்பிங்கையும் பேசி முடித்துவிடுவார்கள் எனவும் படக்குழு அறிவித்திருந்த நிலையில், எஞ்சியுள்ள பாடல்களில் ஒரு பாடலை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாகச் சமீபத்தில் புதிய தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தப் பாடல் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

  • 1253 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !