‘பீம்லா நாயக்’ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் ட்ரெண்டிங்கில் #ராணாடகுபடி!

 ‘பீம்லா நாயக்’ படத்தின் அடுத்த மாஸ் அப்டேட் ட்ரெண்டிங்கில் #ராணாடகுபடி!

கடந்தாண்டு மலையாளத்தில் “அய்யப்பனும், கோஷியும்” என்ற திரைப்படம் வெளியானது. இரண்டு கதாநாயகர்களை முதன்மை கதாபாத்திரமாக கொண்ட இந்த படத்தில் பிஜூமேனன் மற்றும் பிரித்விராஜ் சுகுமாறன் பிரதான கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.

இந்த படத்தை பல்வேறு மொழிகளில் மறு ஆக்கம் செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வந்தது. இதையடுத்து, தெலுங்கில் இந்த படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

படத்தின் நாயகனாக பவன் கல்யாணும், பாகுபலி வில்லன் ராணாவும் இணைந்து நடிப்பது உறுதி செய்யப்பட்டு, படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடித்துள்ள இந்த படத்திற்கு “பீம்லா நாயக்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயரும், படத்திற்கான போஸ்டரும், ஒரு சிறு டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டார்.

இந்த நிலையில் படத்தின் ராணாவின் போஸ்டரை இன்று மாலை வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது

  • 1599 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !