போதை பொருள் வழக்கில் ஆஜர் ஆன ரகுல் ப்ரீத் சிங்!!

 போதை பொருள் வழக்கில் ஆஜர் ஆன ரகுல் ப்ரீத் சிங்!!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிசியாக வலம் வருபவர். 2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் திரைப்படத்தின் மூலம் ரகுல் ப்ரீத் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதையடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என். ஜி. கே ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகுல் பிரீத் சிங் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். போதை மருந்து விவகாரத்தில் பல தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகளுக்கு தொடர்புள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே, இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், ராணா, நவ்தீப் ரவிதேஜா உள்பட 12 பிரபலங்கள் சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது இந்த வழக்கில் பண மோசடியும் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகிறார்கள்.  இது தொடர்பாக ஏற்கனவே பிரபல இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி  ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று பிரபல நடிகை ராகுல் ப்ரீத்தி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி உள்ளார்.

 • 110 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !