தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகும் ரஜினியின் ’#அண்ணாத்த’ – வெளியான அறிவிப்பு!

 தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகும் ரஜினியின் ’#அண்ணாத்த’ – வெளியான அறிவிப்பு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “அண்ணாத்த” படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் இயக்குனராக விஸ்வாசம், வேதாளம், வீரம், விவேகம், சிறுத்தை பட இயக்குனர் சிவாவும், ஒளிப்பதிவாளராக வெற்றியும், கலை இயக்குனராக மிலனும், இசையமைப்பாளராக இமானும், எடிட்டராக ரூபனும் பணிபுரிகின்றனர். ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதிபாபு, வேல ராமமூர்த்தி, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.

அண்ணாத்த’ படத்திற்கு U/A  தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, படத்தின் ஓட்ட நேரம்  2 மணிநேரம் 43 நிமிடங்கள்  என சென்சார் போர்டு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினியின் பெயர் கணேசன் என தகவல்கள் கிடைத்துள்ளன.

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. இந்த படம் தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

 • 7098 Views

  In and Out Staff

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !