ரஜினியின் ‘அண்ணாத்த’: ரிலீஸ் தேதியுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

 ரஜினியின் ‘அண்ணாத்த’: ரிலீஸ் தேதியுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

கரோனா பரவல் காரணமாகபடப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தின் காட்சிகள் தற்போது பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் கடந்த ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி, 30 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடித்து தனது பகுதியில் பெரும்பாலான காட்சிகளை முடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.

கரோனா விதிமுறைகள் காரணமாக, ரஜினிகாந்த் நடித்த சண்டைக்காட்சிகள் உட்பட பெரும்பாலானகாட்சிகள் சமூக இடைவெளியைபின்பற்றியே படமாக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதிகளால் அவற்றை சரிசெய்து கொள்ளலாம் என இயக்குநர் சிவா திட்டமிட்டிருக்கிறார். ரஜினியின் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே இன்னும் பாக்கி உள்ளன.

கரோனா பரவல் குறைந்து, உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று உள்ளார்.

இந்த நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக சற்றுமுன் ‘அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி அட்டகாசமாக உள்ளார் என்று ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ஒருமுறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி விருந்து உறுதி என்பது தெரிய வந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  • 9 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !