தனுஷ் – ஜி.வி.பிரகாஷ் காம்போவில் ‘வாத்தி’ படத்தின் முழு பாடல்கள் விவரம்!!
புகழ் பெற்ற தர்காவில் ரஜினிகாந்த்துடன், AR ரகுமான் : சூழ்ந்த ரசிகர்கள்!!

இன்று காலை ரஜினி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் ரஜினி பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சென்று தர்காவில் வழிப்பட்ட ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் ரஜினியின் மகள் ஐஷ்வர்யா உடன் இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த ”பாபா” திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர் ரகுமான் பணிபுரிந்தார். தற்போது இந்த படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் இருவரும் அமீன் தர்காவிற்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது