ஆபாச படம் எடுத்த வழக்கு – பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் கைது!

 ஆபாச படம் எடுத்த வழக்கு  – பிரபல பாலிவுட் நடிகையின் கணவர் கைது!

ஆபாச பட வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ்குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர்.

சில செயலிகள் மூலம் ஆபாச படங்கள் தயாரித்து, அதனை விநியோகம் செய்ததாக கடந்த பிப்., மாதம் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆபாச படங்களை தயாரித்து, விநியோகம் செய்ததாக இந்த ஆண்டு பிப்ரவரியில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் இந்த அதிர்ச்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாக்ரலே நள்ளிரவு அறிக்கையில் தெரிவித்துள்ளார். . இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாக அவர் உள்ளது தெரியவருகிறது. அவருக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இது தொடர்பாக எங்களுக்கு போதுமான சான்றுகள் உள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

  • 156 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !