நடிகர் சரத்குமார், ராதிகாவுக்கு சிறை தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!

 நடிகர் சரத்குமார், ராதிகாவுக்கு சிறை தண்டனை.. நீதிமன்றம் தீர்ப்பு..!

தமிழ் நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார், அவரது மனைவி, நடிகை மற்றும் தயாரிப்பாளர் ராதிகா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள் . 2018 காசோலை பவுன்ஸ் வழக்கில், நீதிமன்றம் இருவருக்கும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்தது.

2015 ஆம் ஆண்டில் ராதிகாவும் சரத்குமாரும் ‘இடு என்னா மாயம்’ படத்திற்காக ரேடியண்ட் குழுமத்திடமிருந்து பெரும் கடன் வாங்கினர். ஆனால் கடன் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தப்படவில்லை. சொன்னபடி நடந்துகொள்ளாமல் சரத்குமார், ராதிகா இணைந்து ‘பாம்புசட்டை’ என்ற படத்தை தயாரித்ததால், ரேடியன்ஸ் மீடியா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர்கள் கொடுத்த கொடுக்கப்பட்ட 7 செக்-களும் (cheque) பணமில்லாமல் திரும்பப்பட்டதால் சரத்குமார், ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையில் ஏழு வழக்குகளிலும் செக் மோசடி நடந்தது உண்மை என நீதிமன்றம் கண்டறிந்து, மூவரும் குற்றவாளிகள் என உத்தரவு பிறப்பித்துள்ளது. 7 வழக்குகளிலும் எதிர்மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு ஏழு வழக்குகளிலும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராதிகாவுக்கு இரண்டு வழக்குகளில் தலா ஒரு ஆண்டும், ஸ்டீபனுக்கு தலா ஒரு ஆண்டும் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

 • 32 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !