PUBG Madan : வலைவீசி தேடும் போலீஸ் ?

 PUBG Madan : வலைவீசி தேடும் போலீஸ் ?

சிறுவர்கள் விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் யூடியூபர் ஒருவர் மீது பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு புகார்கள் எழுந்துள்ளன.

பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டாலும் விபிஎன் முறையில் சட்டவிரோதமாக அந்தவிளையாட்டை சிலர் விளையாடி வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் முழ்கிக்கிடக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டின் ட்ரிக்சை முகத்தை காட்டாமல் ஆன்லைனில் விளையாடிக்கொண்டே விளக்குவது தான் மதன் யூடியூப் சேனல்.

ஆனால் அப்படி இந்த யூடியூப் சேனலில் பப்ஜி பற்றி பேசுவதை விட அந்தரங்கமும், பெண்களை பற்றிய ஆபாசமும் தான் அதிகம் பேசப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது.

சேனலில் ஆன்லைன் விளையாட்டில் வரும் மதன் தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் மதன். அதிலும், பெண்கள் என்றால், அவரது வார்த்தைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது.

இந்த நிலையில், இவருடைய விளையாட்டு வீடியோ ஒன்றில் பெண்களை மிக ஆபாசமாகப் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • 25 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !