தேடப்பட்டு வரும் யூடியூபர் பப்ஜி மதன் போலீசில் சரணடைய இருப்பதாக தகவல்!

தேடப்பட்டு வரும் யூடியூபர் மதனின் வங்கி கணக்கு , மற்றும் முதலீடுகளை ஆய்வு செய்யும் போலீசார். பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்ஸியில் முதலீடுகள் செய்துள்ளதாக விசாரணையில் தகவல் வெளியாயிருக்கிறது.
மாதத்திற்கு 10 லட்சம் வரை வருமானம் ஈட்டிவந்த மதனின் வங்கி கணக்கு தற்பொழுது ஆய்வுக்கு உள்ளாகியிருக்கிறது. மேலும் எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார் என்பதையும் ஆய்வு செய்கின்றனர். யூடியூபர் மதனை பிடிப்பதற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திடுக்கிடும் சில தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. மதனின் பெயரில் மூன்று சொகுசு கார்கள் வாங்கி இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றும் சென்னையில் இரண்டு புதிய வீடுகள் கட்டியுள்ளார்.
ஏறக்குறைய பத்து லட்சதிற்கு மேல் யூடியுப் மூலம் மாத வருமானம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இந்த பணத்தையெல்லாம் வைத்து பங்கு வர்த்தகம் மற்றும் கிரிப்டோகரன்ஸிலாம் முதலீடு செய்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் வெளிவந்துள்ளது. மதனை பிடிப்பதற்காக போலீஸார் முழு வீச்சில் இறங்கிய நிலையில் மதனே சரணடைய போவதாக தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது.
நேற்று கூட மதன் ஒரு யூடியுப் சேனலில் ஒரு ஆபாசமாக பேசி வீடியோ வெளியுட்டுள்ளார். மொத்தம் 4 யூடியுப் சேனலல் அவர் நடத்தி வருவதாகவும், தற்பொழுது 3 யூடியுப் சேனல் செயல்படாதவண்ணம் இருக்கிறது. மேலும் இந்த PUBG விளையாட்டில் மதனுடன் விளையாடுபவர்கள் விஐபி மகன்கள் மற்றும் வெளிநாட்டு பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சேனலை முடக்குவதற்க்கு போலீஸார் யூடியுப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியிருகின்றனர்.
PUBG மதனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ய இவரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் மத்திய குற்ற போலீஸார் திரட்டிவருகின்றனர். மதனின் தந்தையிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். நேற்று மதனின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் குடுப்பதாரிடமும் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வழக்கை பொறுத்த வரை மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா இருவருமே குற்றவாளிகள் என்று போலீஸார் தரப்பில் கூறியுள்ளனர். ஏனென்றால் கிருத்திகா சேனலின் அட்மின் மட்டுமில்லாமல் அவரும் மதனுடன் சேர்ந்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியுட்டுள்ளனர். தற்பொழுது அனைத்து விடீயோக்களும் மதனின் கணிப்பொறியிலிருந்து போலீஸாரால் கைப்பற்றப்படுள்ளது. பெருங்களத்தூரில் உள்ள இவரது வீட்டில்தான் ஒரு அலுவலகம் போல் செயல்படுத்தியதாக கிருத்திகா போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
மதன் எங்குள்ளார் என்பது தெரியவில்லை என்றும் அவர் என்னிடம் பேசி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். மதன் முதல் குற்றவாளி, கிருத்திகா இரண்டாவது குற்றவாளி என்பதால் கிருத்திகா தற்பொழுது அவர் புழல் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
மதனை பிடித்தால்தான் மற்ற தகவல்கள் வெளியில் வரும் என்பது தெரிகிறது. மதன் எங்குள்ளார் என்ன செய்ய போகிறார் என்பது தற்பொழுது புதிராக இருக்கிறது.