பிரித்விராஜ் படத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்!?

 பிரித்விராஜ் படத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் பிரபலங்கள்!?

மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பிறகு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மலையாளத்தில் பிரித்விராஜுடன் காப்பா என்ற படத்தில் நடிக்க மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தை வேணு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பட வேலைகள் தொடங்கிய நிலையில் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து வேணு விலகினார்.

எனவே அவருக்கு பதிலாக ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் இருந்து மஞ்சு வாரியரும் விலகி உள்ளார். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஞ்சு வாரியர் எதற்காக இப்படத்தில் இருந்து விலகினார் என்பதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

  • 3 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !