அடுத்த ஜாக்பாட் மற்றொரு பிரபல நடிகருடன் இணையும் பூஜா ஹெக்டேே…

 அடுத்த ஜாக்பாட் மற்றொரு பிரபல நடிகருடன் இணையும் பூஜா ஹெக்டேே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘டி 43’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்படம் தவிர்த்து செல்வராகவன் இயக்கத்தில் இரு படங்கள், ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் இரு படங்கள் என நிறைய படங்கள் தனுஷ் கைவசம் உள்ளன.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி – தனுஷ் கூட்டணியில் உருவாகவுள்ள படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய கல்விச் சூழலை மையப்படுத்தி உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்கும் யோசனையில் படக்குழு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக படக்குழு பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. வெங்கி அட்லூரி – தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தை சித்தாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.   

  • 5737 Views

    1 Comment

    • Poja hegdey kuda ivvana ???

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !