ஆதித்ய கரிகாலனாக மாறியா விக்ரம்..புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு!!

 ஆதித்ய கரிகாலனாக மாறியா விக்ரம்..புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழு!!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் “பொன்னியின் செல்வன்-1” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் “பொன்னியின் செல்வன்” வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சில தினங்களுக்கு முன்பு வருகிறான் சோழன் என்ற வாசகத்துடன் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையுடன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், “பொன்னியின் செல்வன்” படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் விக்ரம், ஆதித்ய கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தெரிவித்து போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

  • 8 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !