ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
தமிழக அரசின் புதிய பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பால் பொதுமக்கள் ஏமாற்றம்…

பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகுப்பில், ரொக்கம் இடம்பெறாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் உத்தரவிட்டார்.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், பாசிபருப்பு, கோதுமை, உளுந்து, கடலைபருப்பு, புளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, கரும்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையுடன் வழங்கப்படுகிறது.
ரூ.505 மதிப்புள்ள பரிசுத்தொகுப்பு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது. ஒரு கோடியே 15 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.
முதலில் கரும்பு இடம்பெறாத நிலையில் எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கையின் பேரில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது. இருப்பினும், அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் பொங்கல் பரிசுடன் ரொக்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்கமும் வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர்.