Category: Politics

‘உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும் ‘-ராகுல்காந்தி!

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், தேர்தல் பிரசாரத்திற்காக 3 நாள் பயணமாக ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்துளார். அதைத் தொடர்ந்து, ராகுல்காந்தி திறந்தவெளி வாகனத்தில் கோவையில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பின்னர், கோவையில் சிறு, குறு தொழிற்துறையினருடன் கலந்துரையாடினார். இந்த நிலையில் கோவையில் உள்ள சின்னியம்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது […]

மருத்துவமலையில் இருந்து வீடு திரும்ப கமல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டு வந்தார். காலில் தொடர்ந்து வலி ஏற்பட்டு வந்ததால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. […]

குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து- தமிழக அரசு!

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெறும். இதில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெரும். இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதை தமிழக அரசு தவிர்த்துள்ளது. மேலும் சுதந்திர போராட்ட வீரர்களை அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று அரசு அதிகாரிகள் கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் […]

‘சசிகலாவை இணைக்க 100% வாய்ப்பில்லை!’- எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாகவே கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு 2 நாள் பயணமாக விமானத்தில் புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி […]

வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை !

பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகள் என எவரிடமும் எந்த கருத்துகேட்பு மற்றும் ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் பெரும்பான்மையை பயன்படுத்தி புதிய வேளாண் சட்டங்களை மத்திய மோடி அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் நிறைவேற்றியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறிப்பட்டதாவது:- இந்த சட்டத்தை தற்காலிகமாக […]

“என்னை வாழவைக்கும் தெய்வங்கள்”-ரஜினிகாந்த் வேதனை!

அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் என்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், * நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்.* அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.* நான் அரசியலுக்கு வராததை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிலர் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.* நான் ஏன் அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கி உள்ளேன். இவ்வாறு அவர் கூறி […]

“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கம்”-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலைக்காக தங்கி இருப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11,12,13 ஆகிய தேதிகளில் 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 10,228 […]

அரசுப் பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ் விடுவிப்பு?

விருப்ப ஓய்வு கடிதம் அளித்திருந்த நிலையில் அரசுப் பணியில் இருந்து சகாயம் ஐ.ஏ.எஸ். விடுவிக்கப்பட்டார். நாமக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர் சகாயம் ஐ.ஏ.எஸ். இவர் மதுரையில் ஆட்சியராக இருந்தபோது கிரானைட் குவாரி விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக தமிழக அறிவியல் நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம் ஐ.ஏ.எஸ்., தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு அக்டோபர் 2-ஆம் தேதி கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில் கடிதம் அளித்து மூன்று மாதங்கள் […]

28ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு உத்தரவு!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு. இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு நான் […]

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்கியது!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதன்படி சுமார் 2 கோடியே 10 லட்சம் பேர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக வீடு […]
Page 1 of 1712345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news