ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ !!
ஒரே மேடையில் ஸ்டாலின் – ராகுல்; மார்ச் 28-ல் பிரசாரம்!

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. மே 2-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது.
இதில் திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக், மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் 14 கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. மநீம, அமமுக கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்துக் களம் காண்கிறது.
இந்த நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் மே 28-ந் தேதி பிரசாரம் செய்கின்றனர். சேலம் சீலநாயக்கன்பட்டியில் உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் இந்த பிர்ரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கின்றனர்.மேலும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களான இரா. முத்தரசன், கே.எம். காதர் மொகிதீன், தொல். திருமாவளவன், ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன், ஈ.ஆர். ஈஸ்வரன், பி.வி. கதிரவன், இரா. அதியமான், இனிகோ இருதயராஜ், முருகவேல்ராஜன் ஆகியோரும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அதிமுக கூட்டணியிலும் இதேபோல் பிரமாண்ட பொதுக்கூட்டம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.