‘திமுக ‘ தமிழகத்திற்கான கொண்டு வந்த திட்டங்கள் என்ன ?பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி !

 ‘திமுக ‘ தமிழகத்திற்கான கொண்டு வந்த திட்டங்கள் என்ன ?பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி !

திருச்சியில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். வீடு வீடாக சென்று அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அதன்பின், கோயில் ராஜகோபுரம் முன் அமைக்கப்பட்டிருந்த பிரச்சார மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ” ஸ்ரீரங்கம் தொகுதி என்றும் ஜெயலலிதாவின் தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியானது அதிமுகவின் கோட்டையாகவும் விளங்குகிறது. பெருவாரியான வாக்குகள் அதிமுகவிற்கு அளித்து தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறுவதற்கு ஸ்ரீரங்கம் தொகுதி உறுதுணையாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது. மணப்பாறையில் காகித தொழிற்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.” என்று கூறினார்

திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மேலணை கதவணை பணிகள் விரைவில் முடிவடையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டு சோமரசம்பேட்டை சென்ற முதல்வர், அங்கு மகளிர் சுய உதவிக் குழுவினரை சந்தித்து பேசுகிறார்.

பின்பு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுகவின் ஊழலை விசாரிக்க தனிநீதிமன்றம் வேண்டும் எனப் பொய்யாக குற்றம் சாட்டி வருகிறார். திமுக எம்.பிக்கள் தமிழகத்திற்கான திட்டங்களை கொண்டு வந்தார்கள்? நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர்கள் முதலில் தமிழகத்தை நினைத்துப் பார்த்தார்களா? இவர்கள் எப்படி மக்களுக்கான நலத்திட்டங்களைக் குறித்து சிந்தனை செய்வார்கள்?

இப்படி தேர்தல் பிரச்சாரத்தின போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 • 14 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !