எப்படி இருக்கிறது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 – ட்விட்டர் விமர்சனம்!

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2016ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. இந்த நிலையில் பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டார். அதற்காக சில இயக்குனர்களிடமும் பேசினார். ஆனால் இறுதியில் நடிகர் விஜய் ஆண்டனியே பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.