பத்தல பத்தல’ பாடலின் வீடியோ ரிலீஸ்… வெளியான மாஸ் அப்டேட்!!

 பத்தல பத்தல’ பாடலின் வீடியோ ரிலீஸ்… வெளியான மாஸ் அப்டேட்!!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தியேட்டர்களில் திரும்ப திரும்ப பார்த்து வரும் ரசிகர்கள் ஓடிடி தளத்திலும் அதிக எண்ணிக்கையில் பார்த்து ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல், சூர்யா, பகத் பாசில், விஜய்சேதுபதி என மல்டி ஸ்டார்களைக் கொண்டு உருவான விக்ரம் திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 4 வாரங்களைக் கடந்த நிலையில் வார இறுதி நாட்களில் இந்தப் படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடுகிறது.

உலக அளவில் இந்தப் படம் ரூ. 400 கோடி வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தியேட்டர் ரிலீஸில் மட்டும் சுமார் ரூ. 500 கோடியை விக்ரம் எட்டக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற chartbuster ஹிட் பாடலான பத்தல பத்தல பாடல் சமூகவலைதளங்களில் மிகப்பெரிய கவனம் பெற்றது. இந்த பாடலின் வீடியோவுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் நாளை (ஜூலை 1) இந்த பாடலின் வீடியோ வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • 6 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !