பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
‘#பதான்’ OTT வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!

2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் – பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
பதான் திரைப்படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,000 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகார்வபூர்வமாக அறிவித்தது இருந்தது. மேலும், இத்திரைப்படம் இந்தியில் மட்டும் ரூ.526 கோடி வசூலித்து, அதிக வசூலை பெற்ற பாலிவுட் படம் என்ற சாதனையைப் படைத்தது.
இந்த நிலையில் பதான் திரைப்படம் மார்ச் 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.