பொன்னியின் செல்வன் -2′ டிரைலர் லோடிங்.. வைரலாகும் கிளிம்ப்ஸ் வீடியோ!!
அடுத்த படத்தின் பெயரை வெளியிட்ட பார்த்திபன்!

நடிகரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது அடுத்த படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். சமீபத்தில் அவர் இயக்கி நடித்து வெளியான இரவின் நிழல்’ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
மேலும் சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படங்களின் பட்டியலில் அந்த படமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் பார்த்திபன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு தகுதியான படங்களின் பட்டியலில் அந்த படமும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் பார்த்திபன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஒரு புடவையோட அழகு அதோட தலைப்புல தெரியும். அந்த மாதிரி இந்த டிசைனுக்குள்ள இருக்க திரைப்படத்தோட தலைப்பைக் கண்டுபிடிங்க பாக்கலாம்!’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளார். ’52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்பதே படத்தின் பெயர். அகிரா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. பார்த்திபன் இயக்குகிறார்.