இயக்குனர் வெற்றிமாறன் பர்த்டே ஸ்பெஷல்… வெளியான ’விடுதலை ’ பட புதிய அப்டேட்!

 இயக்குனர் வெற்றிமாறன் பர்த்டே ஸ்பெஷல்… வெளியான ’விடுதலை ’ பட புதிய அப்டேட்!

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக இருந்த நிலையில் இப்போது கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. பாவக்கதைகள் ஆந்தாலஜி மூலமாக அறிமுகமான நடிகை பவானி ஸ்ரீதான் இந்த படத்தின் கதாநாயகியாம். இவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி வி பிரகாஷின் தங்கையாவார். இந்த படத்தில் அவர் சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறார்.

 • 3147 Views

  In and Out Staff

  1 Comment

  • Happy birthday vetri sir

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !