விக்ரம் நடிக்கும்#தங்கலான் படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட படத்தின் பிரத்யேக மேக்கிங் விடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே, படப்பிடிப்புக்கான ஒத்திகையின்போது விபத்தில் சிக்கிய விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததால், சிறிது காலம் ஓய்வில் உள்ளார்.
இந்நிலையில், தங்கலான் படம் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்திருப்பதாவது:
“இந்தப் படத்திற்காக சுமார் 7 மாதங்கள் காத்திருந்து தனது எடையை குறைத்ததுடன், எவ்வித தயக்கமுமின்றி தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டார். ஒரு வாரம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், என்னை தொடர்பு கொண்ட விக்ரம், ‘நீங்கள் படத்தை இயக்கும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
மொத்தம் 105 நாள்கள் படப்பிடிப்பு இதுவரை முடிவடைந்துள்ளது. இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பே மீதமுள்ளது. இந்த படத்தை பார்த்து உலக ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
கோலார் தங்க சுரங்கத்தில் கேஜிஎஃப் தோற்றத்துக்கு முன்பு, 19-ஆம் நூற்றாண்டு மக்கள் எதிர்கொண்ட பிரச்னைகளை இப்படம் எடுத்துரைக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.