உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ மோஷன் போஸ்டர் வெளியீடு!

 உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ மோஷன் போஸ்டர் வெளியீடு!


அனுபவ் சின்ஹா இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘ஆர்டிகிள் 15’ தமிழில் ரீமேக் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது.

தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, சிவாங்கி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்திற்கு ‘நெஞ்சுக்கு நீதி’ எனப் பெயரிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்தின் மோஷன் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.  

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

  • 1977 Views

    In and Out Staff

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !