ஷாருக்கான் ஜோடியாகும் நயன்தாரா? – ட்விட்டர் ட்ரெண்டிங்!

 ஷாருக்கான் ஜோடியாகும் நயன்தாரா? – ட்விட்டர் ட்ரெண்டிங்!

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ராஜா ராணி படம் மூலம் இயக்குநரானவர் அட்லி. அந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின். அடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று படங்களை இயக்கினார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஷாருக்கான், அட்லி படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கவிருந்தது. ஆனால் டிசம்பர் மாதம் தான் படப்பிடிப்பு துவங்கும் என்று தற்போது கூறப்படுகிறது.ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடித்து வருகிறார். அந்த பட வேலையை முடித்த பிறகே அட்லி படத்தில் நடிப்பாராம். இந்நிலையில் ஷாருக்கானுக்கு ஏற்ற ஹீரோயினை ஒப்பந்தம் செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார் அட்லி.

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க அட்லி நயன்தாராவுடன் பேசியுள்ளார். அட்லியின் முதல் படத்திலும், கடைசிப் படமான பிகிலிலும் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். 

இந்திப் படத்தில் நடிக்க நயன்தாரா எப்போதுமே ஆர்வம் காட்டியதில்லை. இந்தமுறை அட்லியின் ஆஃபரை அவர் ஒத்துக் கொள்வாரா என்பதும் தெரியவில்லை.

  • 19 Views

    Leave a Reply

    Will be published

    Translate »
    close
    Thanks !

    Thanks for sharing this, you are awesome !