போயஸ்கார்டன் to ஸ்டூடியோ; ரிகர்சலுக்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைதட்டி பாடல்களை ரசித்தார்!
“ஜென்டில்மேன்-2 கதாநாயகி நயன்தாராதான்; ஆனால்…” – இயக்குநர் கொடுத்த ட்விஸ்ட்

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் முதல் படம் ’ஜென்டில்மேன்’. இந்த படத்தில் அர்ஜூன், கவுண்டமணி, மதுபாலா, மனோரம்மா உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர். 1993ஆம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தின் ஆல்பமும் க்ளாஸிக் ஹிட்டானது.
இப்படத்தை தயாரித்தவர் கே.டி. குஞ்சுமோன், பல வெற்றிப் படங்களை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தவர் தற்போது சினிமாத் துறையில் எந்த படங்களையும் தயாரிக்காமல் ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். ஜென்டில்மேன் 2 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் தற்போது அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிக்கவில்லை மலையாள நடிகையான நயன்தாரா சக்கரவர்த்தி தான் நடிக்க உள்ளதாக படக்குழு கூறியுள்ளது.
தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர் தற்போது ‘ஜென்டில்மேன் 2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இன்னும் படத்தின் ஹீரோ, இயக்குநர் யார் என்பது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.