மணி ரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி தொடரின் தலைப்பு அறிவிப்பு !ட்ரெண்டாகும் சூரியா போட்டோ …

 மணி ரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி தொடரின் தலைப்பு அறிவிப்பு !ட்ரெண்டாகும் சூரியா போட்டோ …

9 பிரபல நடிகர்கள் மற்றும் 9 பிரபல இயக்குனர்கள் உருவாக்கும் ’நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருக்கும் இந்தத் தொடரை மணிரத்னம் தயாரித்து உள்ளார் என்பதும் இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.

* ‘கருணை’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். ‘எதிரி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

* ‘ஆச்சரியம்’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். ‘ப்ராஜெக்ட் அக்னி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அரவிந்த்சுவாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

* ‘காமெடி’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். ‘சம்மர் ஆப் 92’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

* ‘கோபம்’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை அரவிந்த்சுவாமி இயக்கியுள்ளார். ‘ரெளத்திரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

R

* ‘காதல்’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

* ‘தைரியம்’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். ‘துணிந்த பின்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

* ‘அருவருப்பு’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை வஸந்த் சாய் இயக்கியுள்ளார். ‘பாயசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

* ‘அமைதி’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். ‘பீஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

* ‘பயம்’ மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். ‘இன்மை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக ‘நவரசா’ ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜியில் அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்துள்ளனர்.

 • 19 Views

  Leave a Reply

  Will be published

  Translate »
  close
  Thanks !

  Thanks for sharing this, you are awesome !