சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகம், புதுச்சேரி, மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் […]